நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; தீர்வு கிடைக்காவிடின் நாளை வீதியில் இறங்கி போராட தயார் – சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் சங்கம் எச்சரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்;கு உடனடி தீர்வு கிடைக்காவிடின், நாளை கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உறவினர்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராடத் தயாராக இருப்பதாக சிறைக்கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிறைக்கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்; சுதேஷ் நந்திமால் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அண்மைய மோதல் சம்பவமானது தற்செயலாக நடந்தது ஒன்றல்ல. சிறைச்சாலைகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான எண்ணிக்கையில் 1/4 பங்கு உத்தியோகஸ்தர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். 650 பேர் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில் 2000 இற்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 250 முதல் 300 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதால், கைதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகிய இருதரப்பும் பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்தத் தீவிர அழுத்தமே நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் ஏற்படுவதற்கு பிரதான காரணமாகும். இந்த நிலைமையில் சிறை அதிகாரிகளோ அல்லது கைதிகளோ தன்னிச்சையாக மோதிக்கொள்ளவில்லை. அரசாங்கம் ஏற்படுத்திய நெருக்கடியே இவர்களை மோதவிட்டுள்ளது.

இந்த மோதல்களில் கைதிகள் மட்டுமன்றி சிறை உத்தியோகஸ்தர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். சிறைக்குள் நிலவும் அதிக நெரிசலால் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்கனவே 5 பெண் கைதிகள் உயிரிழந்துள்ளனர். முறையான மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் இல்லாத காரணத்தினாலேயே பெண் கைதிகள் சிறைக்குள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். பெண் கைதியொருவர் மருத்துவப் பரிசோதனைக் கருவியைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு குறியீட்டு ரீதியாகப் போராடியதன் மூலம் சிறைச்சாலைகளின் சுகாதாரப் பேரழிவு அம்பலமாகியுள்ளது.

தற்போது சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாவர். காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தால் வீதியில் செல்வோர் மீதும் போதைப்பொருள் திணிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு சிறைக்கூண்டுகளை விடுத்து, விஞ்ஞானபூர்வமான புனர்வாழ்வுத் திட்டமே அவசியமாகும். மேலும், இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை வராமல் பல கைதிகள் 2 வருடங்களுக்கும் மேலாக சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்திலும் பல கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பலப் பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் உறவினர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. கைதிகளைப் பார்க்க ஒரு வாரம் காத்திருக்குமாறு கூறியதால் ஏற்பட்ட பதற்றத்தில், காவல்துறையினர் உறவினர்களை அடித்து விரட்டியுள்ளனர். உள்ளே இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் வெளியில் பெற்றோர் கதறுகின்றனர்.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக்கப்பட்டு, மேல்முறையீட்டில் விடுதலையான அதிகாரிக்கு இந்த அரசாங்கத்தின் அமைச்சர் விருது வழங்கிப் பாராட்டியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்தபோது ‘சிறைக்குள் நடக்கும் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு’ எனக் கூறியதை நினைவூட்ட விரும்புகிறோம். எனவே இந்த மரணங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

இதற்குள் ஏதேனும் அரசியல் சதித்திட்டம் இருக்கிறதா என அரசாங்கம் ஆராய வேண்டும். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்ற சம்பவங்களுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு வழங்காவிட்டால், கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உறவினர்களைத் திரட்டி நாளை வீதியில் இறங்கிப் போராட தயார் என்றார்

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை