நீரில் மூழ்கி சுமார் 388 பேர் 2025 இல் உயிரிழப்பு

ட்டில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மற்றும் நீர்நிலைகளில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் மாத்திரம் நீரில் மூழ்கி சுமார் 388 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24 பேர் மரணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் இடம்பெறும் விபத்துகள் வெகுவாக அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்கும் முகமாக பொலிஸ் கடற்பிரிவினர் நீர் நிலைசார்ந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அதற்கமைய சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் நீர்நிலைப் பகுதிகளில் மேலதிக உயிர்பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கும், உயிர்காப்பு உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாடு முழுவதும் 31 பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் கடற்படைப் பிரிவினர் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதுவரை 71 உயிர்பாதுகாப்பு பிரிவுகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்தப் பிரிவுகளின் கீழ் சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்ட 308 உத்தியோகத்தர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த வருடம் நீரில் மூழ்கிய நிலையில் 96 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 247 பேரை உயிர்பாதுகாப்பு பிரிவினர் மீட்டுள்ளதுடன், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 சுற்றுலா பயணிகள் உள்ளடங்களாக 33 பேரை மீட்டுள்ளனர்.

எனினும் நீர்நிலைகளைச் சார்ந்த பகுதிகளில் இடம்பெறும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. 2024 ஆம் ஆண்டு 595 பேரும், 2025 ஆம் ஆண்டு 388 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24 பேர் மரணித்துள்ளதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆகையால் பழக்கமில்லாத நீர்நிலைகள், அவதானம் மிக்க பகுதிகள் என அறிவுறுத்தப்பட்டுள்ள நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்