மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மலைப் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் உயிரிழந்தாக செய்தி வெளியானதை அறிந்து வேதனையடைந்தேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் தஷ்காய் எனும் இடத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று (5) மாலை இடம்பெற்ற வெடிப்பு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.