கண்டி – நாவலப்பிட்டி பிரதேசத்தில் மதன மோதக போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் நாவலப்பிட்டி பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் உணவகம் ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான இளைஞன் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து அதிக விலைக்கு மதன மோதக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து 30 மதன மோதக போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.