இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது பல்லேகலவில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஒரு வாரத்தில் உலகக் கிண்ணம் ஆரம்பிக்க முன்னர் இரண்டு அணிகளும் தமது பதினொருவர் அணியை உறுதிப்படுத்த இத்தொடரின் மூன்று போட்டிகளும் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்த வரையில் மீண்டும் வந்துள்ள டெஸ்ட்களுக்கான அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவிடமிருந்து துடுப்பாட்டத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுவதோடு, சரித் அசலங்கவிடமிருந்தும் ஓட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக ஜொஷ் டொங்கின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பெறுபேறுகளைத் தெரிந்து கொள்ள இங்கிலாந்துக்கு சிறந்த வாய்ப்பாக இத்தொடர் காணப்படுவதுடன், பென் டக்கெட்டிடமிருந்தும் அணியில் இடம்பெற்றால் ஓட்டங்களை இங்கிலாந்து எதிர்பார்க்கிறது. ஏனெனில் அணிக்கு வெளியே டொம் பன்டன் உள்ளிட்டோர் காணப்படுகின்றார்.