மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி மற்றும் இசையமைப்பாளர் தேவா தம்பி சபேஷ் ஆகியோர் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.
தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகை மனோரமா. பெண் நடிகைகளில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம், மனோரமா மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி(70), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
மூச்சு திணறல் பிரச்சினையால் அவதிப்பட்ட வந்தார். கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் தனது அம்மா மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே இன்று காலை இவரது உயிர் பிரிந்தது.
நடிகர் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி, அதன் பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். மகனுக்காக தூரத்து பச்சை என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். ஆனால் எது எடுபடவில்லை. சீரியல்கள் சிலவற்றிலும் பூபதி நடித்தார்.