த.வெ.க நிர்வாகி உள்ளிட்டவர்கள் இலங்கைக்கு போதைப்பொருளைக் கடத்தினார்களா?

இலங்கைக்கு கடத்துவதற்காக 135 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட 4 பேரை இந்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகையில் இருந்து இலங்கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் கடத்தப்படுவதாக இந்திய மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரக (திருச்சி மண்டலம்) பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று காலை 6.00 மணியளவில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுகன்(27) என்பவர் வீட்டுக்கு 16 பேர் கொண்ட அதிகாரிகள் வந்தனர்.

அங்கு சோதனை நடத்திய அவர்கள், சுகன், அவரது சகோதரர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்படி வேளாங்கண்ணி அருகே கீழப்பிடாகை சிந்தாமணி மெயின் ரோட்டைச் சேர்ந்த நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பூபாலன் (42) என்பவர் மூளையாகவும், பின்புலமாகவும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் பூபாலன் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் பூபாலனின் சகோதரர் பார்த்திபன்(29), பிரதாபராமபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்த சதீஷ்(30) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பூபாலன் மனைவி பிரேமியா இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், இதை பூபாலன் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு நண்பர்கள் மூலம் போதைப் பொருட்களை கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து, பூபாலன், சுகன், பார்த்திபன், சதீஷ் ஆகிய 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப் பட்ட 4 பேரையும் நாகை சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் 100 கோடி முதல் 135 கோடி இந்திய ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்ததை அண்மையில் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பூபாலன், சுகன் ஆகியோர் தொடர்பு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

இந்த நிலையில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர், கடந்த வாரம் வேதாரண்யம் விடுதியில் தங்கி இருந்தார் எனவும், அவர் கோடியக்கரையில் ஒரு மீனவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து படகையும், அதற்கு காரைக்காலில் இருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிவேக இயந்திரத்தையும் வாங்கிச் சென்றது குறித்து அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த நபரை சுற்றி வளைத்து விசாரித்துள்ளனர். கனடா நாட்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான அவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலனை கட்சியை விட்டு நீக்கி தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், ‘நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த பூபாலன், பல கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மத்திய போதைப் பொருள் கட்டுப்பாடு உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே கட்சியின் கண்ணியம், நற்பெயர் மற்றும் ஒழுக்க கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக செயல்பட்ட காரணத்தால் பூபாலன் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். எனவே நிர்வாகிகள் யாரும் அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என்று அறிவித்துள்ளார்.

blackflag (1)

“பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

October 17, 2026

சென்னை: நாகையில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூபாய் 270 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பிடிபட்டது தொடர்பாகத் தவெக

dailythanthi_2026-10-17_bia32np3_CHENNAI-01

“விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 100 பேரின் கட்சிப்பதவி பறிப்பு!” – எடப்பாடி பழனிசாமி அதிரடி!

October 17, 2026

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 100 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி

dailythanthi_2026-10-16_cbcrk7qh_seeman

“காவிரி தொழில்நுட்பக் குழும துணைத்தலைவரை இதுவரை நியமனம் செய்யாதது ஏன்?” – சீமான் கேள்வி!

October 17, 2026

சென்னை: காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவரைத் தவெக அரசு இதுவரை நியமனம் செய்யாதது ஏன்

dailythanthi_2026-10-16_n3nqa35i_aadhav-arjuna

“பொறாமையில் புலம்புகிறார் மு.க.ஸ்டாலின்: ஆதவ் அர்ஜுனா கடும் தாக்கு!”

October 17, 2026

சென்னை: கோவையில் முதலமைச்சர் விஜய் சமீபத்தில் திறந்து வைத்த பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாகக் கூறி முன்னாள் முதலமைச்சர்

1778666933-4078

“எடப்பாடி பழனிசாமியை முழுமையாக நம்புகிறோம்!” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

October 17, 2026

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாங்கள் முழுமையாக நம்புகிறோம் என்றும், பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்

1200-675-18564993-thumbnail-16x9-dmk

“தவெக அமைச்சர்களுக்கு பாஜகவை விமர்சிக்கத் துணிவில்லை!” – கனிமொழி கடும் விமர்சனம்!

October 17, 2026

சென்னை: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பதவி விலக வேண்டும்

1200-675-27893267-thumbnail-16x9-deva

“தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!” – மாரடைப்பால் உயிர் பிரிந்தது!

October 17, 2026

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும், கானா பாடல்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியவருமான தேனிசைத் தென்றல் தேவா

lal

மக்கள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கம் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்காது- லால்காந்த

October 17, 2026

அரசாங்கம் தனக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு மாறாக ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்காது என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். லால்காந்த மேலும் தெரிவித்துள்ளதாவது

monks pro

பௌத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி- விகாரமகாதேவி பூங்காவில் பௌத்மதகுருமார் போராட்டம்

October 17, 2026

ஞானசார தேரரின் விடுதலையை கோரி; ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்தமதகுருமார் பின்னர் அங்கிருந்து அகன்று விகாரமகாதேவி பூங்காவில்

se

த.வெ.க நிர்வாகி உள்ளிட்டவர்கள் இலங்கைக்கு போதைப்பொருளைக் கடத்தினார்களா?

October 17, 2026

இலங்கைக்கு கடத்துவதற்காக 135 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக்

IMG_9673

வவுனியாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு!

October 17, 2026

வவுனியா மாவட்டத்தில் இந்த வருடத்தில் போதைப் பொருள் பாவனையுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்புகளை கொண்ட 469 துஸ்பிரயோகங்கள் இடம்

_127273436_mediaitem127273433.jpg

“அ.தி.மு.க-வை எப்படி விழுங்கலாம் என முழு நேரத்தை செலவிடுகிறது த.வெ.க!” – கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

October 16, 2026

சென்னை: அதிமுகவின் 55ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்