தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மீது ஒப்பந்த மோசடிக் குற்றச்சாட்டு!

கம்பஹா பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள், அரசாங்க ஒப்பந்தங்களைத் தமது பெயரில் செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அப்பிரதேச சபையின் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நேற்று (07) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, உள்ளூராட்சி சபைகள் கட்டளைச் சட்டத்தின் படி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஒப்பந்தங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனத் தொடர்புடைய உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர்.

அத்துடன் அவ்வாறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு பணம் பெற்றுக்கொள்வது அவர்களது உறுப்புரிமை இரத்துச் செய்யப்படுவதற்கு ஏதுவான ஒரு காரணியாகும் எனவும் சுட்டிக்காட்டிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இச்செயற்பாடு தொடர்பில் மேல் மாகாண ஆளுநரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த உறுப்பினர்கள் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த டிசம்பர் மாத சபை அறிக்கையில் அசோக குமார என்ற உறுப்பினரும், தர்மவன்ச என்ற உறுப்பினரும் பெற்றுக்கொண்ட பணம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி சஹன் பிரசாத் என்ற உறுப்பினர் பணம் பெற்றுக்கொண்ட விதமும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தின் படி நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது. இந்த நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டால் உறுப்புரிமை இரத்துச் செய்யப்படும். அடுத்த சபை அமர்வு 10 ஆம் திகதி உள்ளது. வாசிக்கும் திறன் கொண்டவர்கள் தானே இருக்கிறார்கள். வெட்கம் இருந்தால் சட்டத்தை வாசித்துப் பார்த்துவிட்டு சபைக்கு வரவேண்டாம்.” என்று கூறினர்.

இதற்கிடையில் கம்பஹா பிரதேச சபையின் தவிசாளரும் மாதாந்தம் 500 லீற்றர் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு பணத்தை வீண்விரயம் செய்வதாகவும் அந்த உறுப்பினர்கள் குழு குற்றம் சுமத்தியது.

தவிசாளர் இரண்டரை இலட்சம் ரூபா மாதாந்த வாடகை அடிப்படையில் மோட்டார் வாகனம் ஒன்றையும் பெற்றுக்கொண்டு சபையின் பணத்தை வீண்விரயம் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

“இவர்கள் சபையின் பணத்தைச் சேமிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்து பெருமளவான மக்களின் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால் இன்று பிரதேச சபையின் தவிசாளர் மாதத்திற்கு 5 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளார். அவர் பயன்படுத்தும் வாகனம் வாடகை அடிப்படையில் மாதாந்தம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாவுக்குப் பெறப்பட்டுள்ளது. அவர் 500 லீற்றர் டீசலைச் சபையின் நிதியிலிருந்து பெற்றுள்ளார்.

பிரதேச சபையின் தவிசாளர் இவ்வாறு எடுத்துக்கொள்ள அவர் என்ன இலங்கையின் ஜனாதிபதியா? இவர்கள் மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி விசேட வரப்பிரசாதங்களைப் பெறுகின்றனர். இவர்கள் களைகளைப் பிடுங்கிவிட்டு மலர்ச்செடிகளை நடுவதாகக் கூறித்தான் சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இப்போது அந்த மலர்ச்செடிகள் சும்மாவே களைகளாக மாறிவிட்டன.” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது