‘திட்வாஹ்’ (Ditwah) புயலைத் தொடர்ந்து, இரத்த தானம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அவசர அழைப்பிற்கு இலங்கை மக்கள் அளித்த அபாரமான ஆதரவுக்கு தேசிய இரத்த வங்கி தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.
தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.
வெறும் மூன்று நாட்களுக்குள் 20,000 க்கும் மேற்பட்ட இரத்த தானங்கள் பெறப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
தேசிய இரத்த வங்கியின் அன்றாடத் தேவை 1,500 அலகாக இருக்கும் நிலையில், பொதுமக்களின் பதில், எதிர்பார்ப்புகளைத் தாண்டி மிக அதிகமாக உள்ளது.
தற்போதைய இரத்த இருப்பு நாட்டின் அடுத்த 15 நாட்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக உள்ளது என்றும், இதனால் தேசிய இரத்த வங்கியின் செயல்பாடுகளை இயல்பு நிலைக்குத் திரும்பக் கொண்டு வர முடிந்தது என்றும் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க மேலும் தெரிவித்தார்.
தேசிய இரத்த வங்கிக்குத் தேவைப்பட்ட நேரத்தில் உதவிய அனைத்து குடிமக்களுக்கும் ஊடகங்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்,” என்ற கூறிய அவர் பேரிடர் பதிலளிப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் ஆதரவின் முக்கிய பங்கை பாராட்டினார்.