சென்னை:
தூத்துக்குடி தென்பாகத்தில் சிறைவாசி அருணாச்சலம் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதற்கு வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மூன்று மாதங்களைக் கூட எட்டாத தவெக ஆட்சியில் நான்கு காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது அரசின் முழுமையான நிர்வாகத் தோல்வியைக் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் காவல் மரணங்கள் நிகழ்ந்தபோது குரல் கொடுத்த இன்றைய முதல்வர் விஜய், தனது ஆட்சியில் நடக்கும் மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்காமல் இருப்பது அதிகாரத்திமிர் என அவர் சாடியுள்ளார்.
திரைப்பட வெளியீட்டிற்காக அரசு இயந்திரத்தை ஈடுபடுத்தும் முதல்வர் விஜய்க்கு, அநியாயமாகப் பறிபோன ஒரு உயிருக்கான நீதியைப் பெற்றுத் தர மனமில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, அருணாச்சலம் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் துயர்துடைப்புத் தொகை வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
#SeemanStatement #ThoothukudiCustodialDeath #ArunachalamDeath #NTKLeader #CMVijaySilence #TVKGovernanceFailure #PoliceBrutality #HumanRightsTamilNadu #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #StatePolitics #CrimeAndLaw #CurrentAffairs #PoliticalControversy #CompensationDemand #PublicOutrage #GovernanceIssue #NewsUpdate