தூங்கிக் கொண்டிருக்காமல் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்!

தேசிய மக்கள் சக்தி தமது தோழர்கள் செய்யும் ஊழல் மற்றும் மோசடிகளைப் பாதுகாப்பதைக் கைவிட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தூங்கிக் கொண்டிருக்காமல் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல வலியுறுத்தியுள்ளார்.

மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிக்கப் போவதாகக் கூறும் வசந்த சமரசிங்க உள்ளிட்ட குழுவினரும், ஏனைய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் வெறும் பேச்சுடன் நின்று விடக் கூடாது. எதிர்க்கட்சியினர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், ஆளுங்கட்சியினரோ எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

நீங்கள் உண்மையாகவே ஊழலை எதிர்க்கிறீர்கள் என்றால், உடனடியாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குச் சென்று முறைப்பாடு செய்யுங்கள். தினமும் அங்கு சென்று இந்த விவகாரத்தைக் கிளற வேண்டும். தற்போது அதிக விலைக்கு நிலக்கரியைக் கொள்வனவு செய்துவிட்டு, அதிலிருந்து மிகக் குறைந்த அளவு மின்சார அலகுகளையே உற்பத்தி செய்கிறார்கள்.

இது நாட்டுக்கு இருமடங்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக 75000 தொன் நிலக்கரி எரிக்கப்பட வேண்டிய இடத்தில், தற்போது தரம் குறைந்த நிலக்கரி காரணமாக அதைவிட அதிகளவு எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி எரிப்பின் போது வெளியேறும் சாம்பலின் அளவு பொதுவாக 16% ஆக இருக்க வேண்டும். ஆனால் தற்போது அது 22% ஆக உயர்ந்துள்ளது. இந்த அதிகப்படியான கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் சுற்றுச்சூழலில் கலக்கவிடப்படுகின்றன. இதனால் அப்பகுதி வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், முக்கிய புனிதப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்