தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் நாட்டின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும் ஆபத்து

நாட்டில் தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும் ஆபத்தானதாகும். இது குறித்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நான்கு பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பிய போதிலும், இதுவரை அதற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் ஒரு மௌலவியா இல்லையா என்பதையும், அவரது மதக் கொள்கை என்ன என்பதையும் பகிரங்கப்படுத்துமாறு இதற்கு முன்னரும் நான் சவால் விடுத்திருக்கின்றேன். அவ்வாறு என்னால் முன்னதாக விடுக்கப்பட்ட சவாலுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அதற்குப் பதிலாக இணையத்தில் தெளிவற்ற கருத்துக்களே பரப்பப்படுகின்றன.

நாட்டில் தீவிரவாதக் கொள்கைகளை உடையவர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றமை மிகவும் ஆபத்தானதாகும். குறிப்பாக வக்ஃப் சபை போன்ற நாட்டின் பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் ஒரு முக்கிய நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள எட்டு நபர்களில், ஆறு பேர் தீவிரவாதக் கொள்கைகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கின்றோம்.

ஜித்தாவிற்கு ஒரு அதிகாரியை நியமிக்க முயன்றபோது, சவூதி பாதுகாப்புத் துறையினர் அந்த நபரை தீவிரவாதக் கொள்கையுடையவர் என்று கூறி நிராகரித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், இலங்கையின் பாதுகாப்புத் துறையினர் இது குறித்து அசமந்த போக்குடன் இருக்கின்றனர்.

வக்ஃப் சபை நியமனங்கள் மற்றும் நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நான்கு பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றேன். ஆனால் இதுவரை அதற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை.

இவ்வாறான நியமனங்கள் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 84 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை