தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அனைத்து கட்சிகளும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட இருக்கின்றன. அதே நேரம் தவெக ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்து இன்னமும் எந்த கட்சியும் கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டாமல் இருக்கின்றன. இதனால் தவெக கட்சி தனியாக வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.
இதனிடையில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கருத்துக்கணிப்புகள் எடுக்கும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தனிப்பட்ட முறையில் தொகுதி வாரியாக சர்வே எடுத்து வருகின்றன. இந்நிலையில் அனுமதி இல்லாமல் தவெக கட்சியை சார்ந்தவர்கள் சர்வே எடுக்க வந்த நிலையில், மிகப்பெரிய பிரச்சனை வெடித்துள்ளது.
அதாவது, சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில் தவெக கட்சியை சார்ந்தவர்கள் பொதுமக்களிடம் சர்வே எடுக்க வந்துள்ளனர். ஆனால் அவர்கள் அனுமதியின்றி இதனை செய்ய முயற்சி செய்தததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தவெகவினரை அனுமதி இல்லாமல் சர்வே எடுக்கக்கூடாது திமுக தடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கை கலப்பு உருவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததால் பெரும் மோதல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமீபத்தில் தவெக சார்பில் விருப்பமனு வழங்கப்பட்டது. இன்னமும் அவர்களுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வராத நிலையில், 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.