திருமலை புத்தர் சிலை விவகாரம்; அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டி தேரர்களைச் சிறையில் அடைக்கிறது – பிக்குகள் கண்டனம்

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது.

கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளும் 7 சிவிலியன்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களது விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபர்களைப் பேருந்தை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்போது சந்தேகநபர் ஒருவரை சிறைச்சாலை அதிகாரி பலவந்தமாகப் பிடித்து பேருந்திற்குள் தள்ளியதாகக் கூறி, அங்கு கூடியிருந்த பிக்குகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவான் பெல்லந்துடாக்க, “இந்த அரசாங்கத்திற்குப் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் எண்ணம் கிடையாது. ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித நேரடிச் சான்றுகளுமின்றி பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் பிக்குகளுக்கு உரிய முறையில் தானம் வழங்கப்படுவதில்லை எனவும், அவர்களது மதச் சடங்குகளைச் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும் சாடினார்.

அங்கு கூடியிருந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிக்குகள், “இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட வர்த்தக நோக்கங்களுக்காகவே இந்தப் புனிதப் பூமி விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றைச் சுயாதீனமாகச் செயற்பட விடாது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது” எனக் கோஷமிட்டனர்.

தற்போதைய அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டி, பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்க முன்னின்று உழைக்கும் தேரர்களைச் சிறையில் அடைப்பதாகக் குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், அரசாங்கத்தின் இச்செயற்பாடு பௌத்த சாசனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனத் தெரிவித்தனர். இந்தத் திடிர் போராட்டத்தினால் நீதிமன்றச் சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்