திருடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு!

யாழில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் சாவகச்சேரிப் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

மீட்ககப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி சாவகச்சேரி நகரிலுள்ள நகைக் கடை உரிமையாளரின் வீட்டிலிருந்து 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளியின் உதவியுடன் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன்போது யாழ். நகரில் வைத்து நவாலியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

பிரதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் குறித்த நபர், கோப்பாய் பிரதேசத்தில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகிய இடங்களில் தலா ஒவ்வொரு வீடுகளிலுமாக ஐந்து வீடுகளில் தங்க நகைகளைத் திருடியமை தெரியவந்தது.

அதனையடுத்து சந்தேக நபருக்கு உதவிய ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரையும், நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன் அடகு வைத்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைப்பற்றினர்.

அதனையடுத்து சந்தேக நபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அடகு கடைகளில் வைக்கப்பட்ட தங்க நகைகளை கட்டுக்காவலுக்குள் கொண்டு வருவதற்கான உத்தரவையும் பொலிஸார் பெற்றனர்.

அதற்கமைய ஊர்காவற்றுறையிலுள்ள அரச வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 26 பவுண் தங்க நகைகளையும், யாழ். நகரிலுள்ள தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட 17 பவுண் தங்க நகைகளையும் சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

photo-collage.png

யாழ். மாவட்ட செயலகத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு

August 26, 2026

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு

acid

கணவனை பழி வாங்க மனைவி மீது அசிட் தாக்குதல்

August 26, 2026

ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில்

paw

திருடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு!

August 26, 2026

யாழில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு

hi

அதிவேக நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

August 26, 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களில் தற்போது

Nirmala-Sitharaman-Ali-Sabry

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) உதவி கிடைக்க இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய முக்கிய பங்கு: அலி சப்ரி வெளிப்படுத்திய தகவல்

August 26, 2026

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இந்திய நிதியமைச்சர்

nanda

இலங்கைப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை நெருங்குகிறது: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

August 26, 2026

2022-ஆம் ஆண்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம் வேகமான மீட்சியடைந்து மீண்டும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை

Namal-750x422

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

August 26, 2026

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல் வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook) மற்றும்

sajith 5

எல் நினோ – லான் நினா காலநிலை மாற்றத்திற்கு எதிராக தேசிய தயார்நிலை தேவை: சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

August 26, 2026

மாறிவரும் எல் நினோ – லான் நினா (El Niño–La Niña) காலநிலை சுழற்சியால் ஏற்படக்கூடிய தீவிர பாதிப்புகளை எதிர்கொள்ள

Suresh Salley Arrested-828580

முன்னாள் புலனாய்வுத் தலைவர் சாலே விசாரணைக்கு இடையூறு விளைவித்து தகவல்களை மறைத்துள்ளார்: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தகவல்

August 26, 2026

சாலே (Suresh Salley) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத்

canada export

டிரம்ப் – கனடா வர்த்தக மோதல் தீவிரமடைதல்: உலகளாவிய தாக்கம்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் கனடியப் பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள வர்த்தக மோதல், வட அமெரிக்க

P_4790484658

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகம் முழுவதும் 29-ஆம் தேதி சிறப்பு முகாம்!

August 26, 2026

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரேஷன் அட்டைதாரர்களுக்கான கைவிரல் ரேகைப் பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்

maalai-malar_2026-08-26_djl2qd6s_vijay

“அன்பும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகட்டும்!” – உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் விஜய் ஓணம் வாழ்த்து!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் ஓணம் நல்வாழ்த்து கேரள மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் திருநாளை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் கட்சித்