விருதுநகர்:
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் தவெகவின் தாக்கம் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
“இளைஞர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான்; ஆனால் அது வெற்றி பெறும் அளவிற்கான தாக்கம் இல்லை” என்று அவர் குறிப்பிட்டார். வடமாநில ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறானவை என்று விமர்சித்த அவர், 2016 தேர்தலின் போதும் திமுகதான் வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அதிமுகவே ஆட்சியைப் பிடித்ததைச் சுட்டிக்காட்டினார். மக்கள் ஊடகங்களிடம் சொல்லாத பல உண்மைகள் அமைதியான முறையில் வாக்குப்பதிவின் போது இரட்டை இலைக்குச் சாதகமாகப் பதிவாகி இருப்பதாகவும், எனவே அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், திமுக இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார். கருத்துக்கணிப்புகள் வெறும் ஊடகத் தீனியே தவிர, அவை கள நிலவரத்தைப் பிரதிபலிக்காது என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
#RajendraBalaji #ADMK #TVK #Vijay #TNElection2026 #ExitPolls #TamilNaduPolitics #BreakingNews #Srivilliputhur #ElectionResults #May4 #DravidianPolitics #VoterVerdict #May3 #PoliticalUpdate #TNPolls #SuccessConfidence #DoubleLeaf #AIADMK_