தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் நீலகாமம் பிரகடனம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

நாம் நீலகாமம் பிரகடனத்தைத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று சபையில் சமர்ப்பித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இதனை சமர்ப்பித்தார்.

நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவத்துக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்தியும் கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் அறவழிப் போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே பிரகடனம் அதிஉயர் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “இராணுவத்தில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பெருந்தோட்டப் பகுதிகளில் கூலிப்படையை உருவாக்க முடியாது. அது தடை செய்யப்பட வேண்டும்.

தோட்டங்களில் பயிரிடப்படாத தரிசு நிலங்களில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்” என்றும் மனோ கணேசன் வலியுறுத்தினார்.

மேலும், மலையக மக்களுக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட ஹட்டன் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுமாறும் அவர் இடித்துரைத்தார்.

மலையக மக்களுக்குக் காணி உரிமை தராமல், ஏனையோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமானால் தமிழ் முற்போக்குக் கூட்டணி நிச்சயம் போராடும் என்றும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து கருத்த தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, “நீலகாமம் பிரச்சினையைத் தேசிய மக்கள் சக்தி அரசு எவ்வாறு கையாள்கின்றது என்பது மக்களுக்குப் புரிகின்றது. எனவே, தவறான தகவல்களை மக்கள் மயப்படுத்த வேண்டாம்.” மனோ கணேசனிடம் வலியுறுத்தினார்.

மேலும், “நீலகாமம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் சபையில் கருத்து வெளியிட்டிருந்தார். அரசே முன்னின்று, அரசின் அனுமதியுடனேயே இது (தாக்குதல்) நடத்தப்பட்டது என்பதையே அவர் (மனோ கணேசன்) கூற முற்படுகின்றார். ஆனால் உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரியும்.

தேசிய மக்கள் சக்தி அரசு இந்தப் பிரச்சினையை எவ்வாறு அணுகுகின்றது என்பதும் மக்களுக்குத் தெரியும். போலியான தகவல்களை மக்கள் மயப்படுத்துவதை நிறுத்துங்கள்.

உங்களது அரசுதான் (ஐ.தே.க.) 1983 களில் தோட்டங்களை எரித்தது. கைதுகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாலும் குறைகூறவே இவர்கள் (எதிரணி) முயற்சிக்கின்றனர்.

மலையகத்தில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. மே தினத்தைக்கூட ஒழுங்காகச் செய்ய முடியாத அந்த நபர்களுக்கு (மலையக கட்சிகள்) அரசை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை.” – என்றார் பிரதி அமைச்சர்.

இதன்போது கருத்து வெளியிட்ட மனோ கணேசன் எம்.பி, “பிரதி அமைச்சர் இங்கு பொய்யுரைக்கின்றார். மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அரசைத் தொடர்பு படுத்தவே இல்லை. அவர் தாமாகுவே தொப்பியைப் போட்டுக்கொள்கின்றார். விசர்த்தனமாக கதைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.” என்றார்.

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,

rain cana

ஜி.டி.ஏ (GTA) பகுதியில் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம்

July 28, 2026

டொராண்டோ நகரில் இன்று இரவு கனமழையும் இடியுடன் கூடிய புயலும் வீசக்கூடும் என்பதால், ‘டொராண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை’

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக

756724618_1047290304383453_223524354740937400_n

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.

July 27, 2026

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம் 01 பிரதான வீதியில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று

suresh11

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு; நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

July 27, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு

SPHU2A42SZGE7MVH4PDL2ITFMY

காணாமல் போன கால்கரி சிறுவன் பார்க்கர் வெல்ஸ் கடத்தப்படவில்லை; காவல்துறை தகவல்

July 27, 2026

11 வயதான பார்க்கர் வெல்ஸைக் கண்டறிவதற்கு வேறு என்னென்ன வழிமுறைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது குறித்து கனடாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான

NJBRXZLYK5F3BKA4TRRZ2H2UBA

பிஃபா உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து கனடாவில்  பலர்அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம்

July 27, 2026

2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளுக்காக கனடாவுக்குப் பயணம் செய்த பலர் நபர்கள், போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில்

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு