தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார்.

குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்களுமே என அவர் தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்லாது, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டம் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

“இந்த ஆட்சியின்கீழ் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தவிதமான இடமும் இல்லை. அனைத்து மக்களையும் சமமாகக் கருதும் கொள்கையுடனேயே அரசாங்கம் செயல்படுகிறது” என அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் படி, கிவுல் ஓயா திட்டம் பாரம்பரிய தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்பையும், மக்கள் தொகை மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், உள்ளூர் மக்களின் சம்மதமின்றி திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீடுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர், தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது என்றும் உறுதியளித்தார். சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என்றும், திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் வடக்கில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அந்த காலகட்டங்களில் எல்லாம் அரசாங்கத்துடன் ஒட்டுனியாக இருந்த தமிழ் கட்சிகள் இன்று தமிழ் மக்களுக்கு நன்மை நடக்கும் பொழுது பொங்கி எழுகின்றன. தமது அரசியல் இருப்புக்கு இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியால் தான் ஆபத்து என்பதால் தான் அவர்கள் மக்கள் நலன் திட்டங்களில் கூட அரசியல் சாயம் பூசி ஒரு இழிவான அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளுராட்சி சபை தேர்தலின் போது கூட அங்த காணி அளவீட்டில் அரசியல் சாயம் பூசி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தன்னுடைய அரசியல் வாக்கு வேட்டைக்காக ஒரு உரிய வகையில் இடம்பெற இருந்த காணி அளவீட்டை குழப்பினார்கள். அதில் மற்றுமொரு அங்கமாகவே இந்த திட்டத்திற்கும் போர் கொடி தொடுக்கிறார்கள்.

தமக்கான அரசியல்பாதை எது என்பது தமிழ் மக்கள் இன்று நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் வரலாறு காணாத வகையில் வடகிழக்கில் கூட எங்களுக்கு ஆதரவு கிடைத்திருக்கின்றது.

இதை குழப்பவதற்கு தான் காழ்புணர்ச்சி அரசியலாக இப்படியான விசமதனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. நாங்கள் மக்களுக்கு விரோதமான எந்ததிட்டங்களையும் முன்னெடுக்க மாட்டோம் என்றார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய