தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் வீட்டுக் காணியில் தமிழர் வரலாற்று மையம்; தடையுத்தரவு விண்ணப்பம் தாக்கல்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு அமைந்திருந்த காணியில் அமைய இருக்கும் தமிழர் வரலாற்று மையத்திற்கு எதிராக காங்கேசன்துறை பொலிஸாரினால் தடையுத்தரவு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது விடயம் தொடர்பில் சில முக்கிய காரணிகளை சுட்டிக்காட்டிய நீதவான் இந்துஜா சிவலிங்கம், தடை உத்தரவு விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்றும், அரச தரப்பு சட்டத்தரணி ஊடாக விண்ணப்பிக்குமாறு கூறி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆலடி வீதி, வல்வெட்டித்துறையில் உள்ள வே.பிரபாகரனின் சகோதரி மதியாபரணம் ஜெயதீஸ்வரிக்கு சொந்தமான குறித்த காணியில் தமிழர் வரலாற்று மையம் அமைத்தற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபையில் அனுமதிகோரி விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் அனுமதி வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த இடத்தில் பிரபாகரனுக்கு சிலை வைக்கப்போவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தெற்கிலங்கையில் உள்ள சில தரப்புகள் இவ்விடயத்தை விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சியாக உருவகப்படுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற அமர்வின் போதும் இந்த விடயம் பேசப்பட்டு உயர் கண்காணிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கட்டுமான விடத்திற்கு தடையுத்தரவு கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை(20) இரகசியமான முறையில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

வடமராட்சியை சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கிற்காக சென்றிருந்த நிலையில் குறித்த தினத்தில் நீதிமன்றத்தில் பெரும்பாலான சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் காங்கேசன்துறை பொலிஸாரினால் குறித்த விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த காணியில் கட்டுமானத்தை மேற்கொள்வதற்காக காணி உரிமையாளரின் அற்றோணித்தத்துவம் (Power of Attorney) உரிமை பெற்றுள்ள ந. அனந்தராஜ், வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அங்கு தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறி அதற்கு தடை உத்தரவு வழங்குமாறு காங்கேசன்துறை பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை குறித்த கட்டுமானத்திற்கு வல்வெட்டித்துறை நகரசபை உள்ளிட்ட தரப்பினரால் அனுமதி எவையும் வழங்கப்படாத நிலையில், எந்த அடிப்படையில் தடை உத்தரவு கோர முடியும் என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சுட்டிக்காட்டி தடை உத்தரவு விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்பதினை அறிவித்த நீதவான் இந்துஜா சிவலிங்கம் அரச தரப்பு சட்டத்தரணி ஊடாக விண்ணப்பிக்குமாறு கூறி எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

DRO

ஆட்கள் பதிவுத் துறை முக்கிய அறிவிப்பு

March 23, 2026

ஆட்கள் பதிவுத் துறையின் கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆட்கள் பதிவுத் துறையின் தலைமை அலுவலகம்

ddda

தனியார் நிலத்தில் காட்டுத் தீ

March 23, 2026

மலையகத்தில் தொடரும் வறட்சியான காலநிலையால் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமச் செயல் அதிகரித்துள்ளது. இதன்படி அட்டன் மண்டலக் கல்வி அலுவலகத்திற்குப்

sw

சுவிஸ் வாழ் 3 இலங்கையர்கள் இஸ்தான்புல் வீதி விபத்தில் பலி!

March 23, 2026

இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர்கள் என அடையாளம்

tru

பதற்ற நிலையில் திடீர்த் திருப்பம்: ஈரான் மீதான தாக்குதல் ஒத்திவைப்பு

March 23, 2026

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலைக்கு இடையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

shiyamali

இலங்கையில் போதுமான அளவு விவசாய உற்பத்திகள் கையிருப்பில் உள்ளன!

March 23, 2026

வரவிருக்கும் பருவத்திற்குத் தேவையான விதைகள் விவசாயத் திணைக்களத்தில் உள்ளன. அடுத்த போகத்திற்குத் தேவையான விதை , நெல் பசளை வகைகள்

n_1

இலங்கையின் தாதியர் சேவை முன்னேற்றம் குறித்து பிரதமர் விசேட கவனம்

March 23, 2026

இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட

Aalam

வாழ்வாதார நெருக்கடியில் வடமாகாணக் கடற்றொழிலாளர்கள்

March 23, 2026

மத்திய கிழக்கில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால் இலங்கையும் அந்த தாக்கத்தின் எதிரொலியாக எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. குறிப்பாக வடமாகாணத்தில்

kili

ஊடகவியலாளர்களின் பணியை முடக்குவதற்கே உயிர் அச்சுறுத்தல் – கிளிநொச்சி ஊடக அமையம்

March 23, 2026

பொதுப்படையான விழிப்புணர்வை ஏற்படுத்திய கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் என்பது

tiket

எரிபொருள் விலையேற்றம்: அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணங்கள்!

March 23, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு

Vasantha samara

உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் வேண்டுகோள்

March 23, 2026

நாட்டில் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற முறையில் உணவு பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க

ddd

இத்தாலி விபத்தில் இலங்கை இளைஞன் பலி

March 23, 2026

இத்தாலியின் மிலான் நகரில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கை சேர்ந்த இளைஞன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி

lab

பாடசாலையொன்றில் விஞ்ஞான பரிசோதனையின் போது சோதனை குழாய் வெடித்தது!

March 23, 2026

பண்டாரவளை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் விஞ்ஞான பரிசோதனையின் போது சோதனை குழாய் (Test Tube) ஒன்று வெடித்ததில் காயமடைந்த ஆசிரியை ஒருவரும்