தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள்; அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிதைகிறது – ரவிகரன்

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன என்று சுட்டிக்காட்டி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காணி அமைச்சருக்கும் குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைத்தல் தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேற்படி விடயம் தொடர்பாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு பகுதியில் அமைந்துள்ளதும் நில அளவையாளர் நாயகம் அவர்களால் பேணப்பட்டுவரும் டிஒபிஒ பிபி70 இலக்க நில அளவை வரைபடத்தின் 17,18, 19 ஆகிய பகுதிகளுக்குரிய தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளும் அதற்கு இடைப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களும் மகாவலி அதிகார சபையால் தென்பகுதியைச் சேர்ந்த ஒரு சிங்கள வர்த்தகருக்கு உப்பளம் அமைப்பதற்காக தற்பொழுது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு முரணான வகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்படி நடவடிக்கை அப்பகுதிக்குரிய மக்களிடையே அதிருப்தியையும் இரண்டு இனங்களுக்கு இடையேயும் முறுகல் நிலையை தோற்றுவித்தது. மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து கடந்த 2026.02.27 ஆம் திகதியன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மேற்படி அத்துமீறிய செயற்பாட்டை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது.

இதன் தொடர்ச்சியாக, அதே நாள் (2026.02.27 மாலை 03.00 மணி) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேற்படி உப்பளச் செய்கையை அடுத்துவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும் வரையிலும் நிறுத்திவைக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு கடிதம் அனுப்பப்படும் என மாவட்டச் செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.

எனினும், 2026.03.06 ஆம் திகதி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறித்த பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன.

எனவே சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் இவ் அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்தஇ முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க,வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

WhatsApp Image 2026-03-11 at 10.45.13

கனடா மிசிசாகா பிரதேச திருட்டு விசாரணை; 13 வாகனங்கள் மீட்பு

March 11, 2026

பீல் பிராந்தியம் – 11 டிவிஷன் தானியங்கிப் பதில் வழங்கிக் குழு (Break and Enter Auto Response Unit)மற்றும்

jud

84 ஈரானிய சடலங்களையும் ஒப்படைக்குமாறு உத்தரவு

March 11, 2026

அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இரண்டு குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை

tx

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வோஷிங்டனில் பரபரப்பு

March 11, 2026

மெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற ‘நேஷனல் மால்’ (National Mall) பகுதியில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும்

b

நாட்டில் பேக்கரித் தொழில் பாதிப்பு!

March 11, 2026

நாட்டில் தற்போது டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி மூலங்களைப் பெற்றுக்கொள்வதில் பேக்கரித் தொழில்சார்ந்தோர் பெரும் சிரமங்களை

sss

நாவிதன்வெளியில் விசேட தேவையுடையவருக்கு வாழ்வாதார உதவி

March 11, 2026

நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் கு. புவனரூபனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், விசேட தேவையுடைய ஒருவருக்கு கோழிக்கூடு மற்றும்

ku

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

March 11, 2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்கள் புதன்கிழமை (11)

f

யாழ்.கொடிகாமத்தில் பேருந்துக்கு தீ வைப்பு

March 11, 2026

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று புதன்கிழமை (11) அதிகாலை பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து

133

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபரின் பணம் மோசடி?

March 11, 2026

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வங்கி அட்டையை (ATM Card) திருடி, அதிலிருந்து

lep

சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

March 11, 2026

இலங்கையில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள்

death

இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி; மரத்தன் மாணவன் விழுந்து பலி

March 11, 2026

புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மரத்தன் ஓட்டத்திற்காக ஏனைய மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்

i

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு

March 11, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

did

9 மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடிப் படகுகளின் திருத்தப் பணிகள் நிறைவு!

March 11, 2026

திட்வா புயலால் நாடு முழுவதிலும் உள்ள மீனவ சமூகத்தின் மீன்பிடிக் கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆறு (06)