மதுரை:
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
குற்றப்பத்திரிகை ரத்து:
நெல்லையில் கடந்த ஆண்டு மென்பொறியாளர் கவின் சாதிய நோக்கத்தோடு வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் காதலியின் சகோதரரான சுர்ஜித் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இதனை ரத்து செய்யக் கோரி அவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
ஆதாரங்கள் இல்லை:
மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய போதிய ஆதாரங்கள் தேவை எனவும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாததால் இருவர் மீதான குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார். உறவினர் ஜெயபால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருமாவளவன் கண்டனம்:
குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன்னரே குற்றப்பத்திரிகையை ரத்து செய்வது தவறான முன்மாதிரி என்றும், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இத்தீர்ப்புக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
#KavinMurderCase #Tirunelveli #MaduraiBench #HonorKilling #Thirumavalavan #VCK #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive