தடுப்புக்காவலில் போதைப்பொருள் கடத்தல்காரர் பொடி லெசி!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்கவை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவர் இன்று (27) பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ரத்கம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மனோஜ் மெண்டிஸின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘பொடி லெசி’ முதன் முதலில் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் மனிதக் கொலைகள், துப்பாக்கிகளை தம் வசம் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பூசா சிறைச்சாலையில் இருந்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்றுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பாக இவருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக 2018 ஆம் ஆண்டு இவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த 2024 டிசம்பர் மாதம் வரை பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாததால் அவர் சிறையிலேயே இருந்தார்.

பின்னர், 2024 டிசம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையான அவர், ஒரு இலட்சம் ரூபாய் பணப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளைச் செலுத்திவிட்டு வெளியேறினார்.

நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பிணை நிபந்தனைகளை மீறி அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கடந்த 2025 ஜனவரி மாதம் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு சட்ட உதவி வழங்குவதற்காக இலங்கையிலிருந்து இரு சட்டத்தரணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா சென்றிருந்தனர்.

இந்திய பாதுகாப்புப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்காக நேற்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரு அதிகாரிகள் இந்தியா சென்றிருந்ததுடன், அவர்களது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

Thileepan

திலீபன் சிலை திறப்பு நிகழ்வில் மாணவர்களை பங்கேற்கச் செய்தமை குறித்து விசாரணை?

September 22, 2026

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திலீபனின் நினைவாக அமைக்கப்பட்ட சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களைப் பங்கேற்கச் செய்தமை தொடர்பில் விசாரணை

dsa

இலங்கைக்கான ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் 2026 பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்

September 22, 2026

இலங்கைக்காக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் 2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் பயிற்சித் திட்டங்களின் தொடரை ஆரம்பித்து

photo-collage.png

தியாக தீபம் திலீபன் நினைவாக சித்திரப் போட்டிகள்

September 22, 2026

​அடுத்தடுத்த சந்ததிகளுக்கு எமது வரலாற்றைக் கடத்தும் முகமாக தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைப் போற்றி நடாத்தப்படும் சித்திரப் போட்டி…

Gnanasa

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடலாம்!

September 22, 2026

நான் மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதாலேயே தனது 87 வயதான தாயாருடன் இணைந்து

va

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

September 21, 2026

மேற்கு – மத்திய மற்றும் அதனை அண்மித்த மத்திய- கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம்,

CM-Vijay-2

“அக். 2 காந்தி ஜெயந்தி முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம்!” – முதல்வர் விஜய் அறிவிப்பு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மறைந்த தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான

790457579_1953889535287104_7272108374973593865_n

மதுராந்தகத்தில் அக். 3-இல் மு.க.ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம்!

September 21, 2026

சென்னை: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனை ஆதரித்துப்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“ஜெம் வீரமணி விவகாரம் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்திருக்காது?” – அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி குற்றச்சாட்டு!

September 21, 2026

சென்னை: தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்,

1200-675-27679355-thumbnail-16x9-ajith

“அஜித்துக்காகக் காத்திருக்கும் பொதுச்செயலாளர் பதவி!” – ரசிகர்கள் தொடங்கிய ‘தமிழக மக்கள் கழகம்’ (TMK)

September 21, 2026

கள்ளக்குறிச்சி: முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வெற்றியால் உந்தப்பட்ட நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் ‘தமிழக மக்கள் கழகம்’

618c12f4bb64efc3583f8a25311d96ad

“ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் தப்பவிடக் கூடாது!” – முதலமைச்சர் விஜய் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு

September 21, 2026

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான சிறுமி வன்கொடுமை (போக்சோ) வழக்கில் தொடர்புடைய ஒருவரைக் கூடத் தப்பவிடக் கூடாது

ஸ்டாலின்

“மீனவர்கள் இடத்தில் தலைமைச் செயலகம் யாருடைய ஆசைக்காக?” – தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

September 21, 2026

ன்னை: பட்டினப்பாக்கத்தில் மீனவர்களின் வாழ்விடங்களை அழித்துவிட்டுப் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை ஆளும் தவெக அரசு உடனடியாகக் கைவிடாவிட்டால்,

1200-675-25418417-thumbnail-16x9-sanmugam

“ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவதா?” – சிபிஎம் சண்முகம் காட்டம்

September 21, 2026

சென்னை: பொதுவுடைமைக் கவிஞர் தமிழ்ஒளி பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் ‘சிங்காரவேலர் அறிவகம்’ திறப்பு