யாழ்ப்பாணத்தில், பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் (01.11.2025) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றுக்குள் வந்த நபர் பொருட்கள் வாங்குவது போல பாவனை செய்து அங்கிருந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார்.
இதன்போது, பல்பொருள் அங்காடியில் இருந்த இரண்டு பெண்களும் சந்தேகபரை துரத்திச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர் முகத்தை மறைக்கும் வகையிலான ஹெல்மெட் ஒன்றை அணிந்து வந்து இவ்வாறு தங்கச் சலியை பறித்துச் சென்றுள்ளதுடன், இரண்டு முறை குறித்த பல்பொருள் அங்காடிக்கு வந்துச் சென்றுள்ளார். சந்தேகநபர் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு பல்பொருள் அங்காடியில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், யாழ். நாவற்குழி பகுதியில் வைத்து அவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை மடக்கிப் பிடித்த ஊர் மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததோடு, அவரிடம் இருந்து தங்க நகையைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து அறுத்துச் செல்லப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து அழைத்துச் சென்றதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.