ட்ரம்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்ற வழக்கில், குற்றவாளியான ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், புளோரிடாவில் உள்ள டிரம்பிற்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது, புதர்களுக்கு இடையே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த 60 வயதுடைய ரியான் ரூத் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.

உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை புளோரிடா நீதிமன்றத்தில் நீதிபதி ஐலீன் கேனன் முன்னிலையில் நடைபெற்றது.

ரியான் ரூத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, வழக்கறிஞர் இல்லாமல் தனக்காகத் தானே வாதிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டபோது, நீதிமன்றத்திலேயே பேனாவால் தனது கழுத்தைக் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “இது ட்ரம்பை கொலை செய்ய நடந்த முயற்சி, ஆனால் நான் தோற்றுவிட்டேன்” என அவர் குறிப்பிட்டிருந்தது முக்கிய ஆதாரமாக அமைந்தது.

புதன்கிழமை (04) நடைபெற்ற இறுதித் தீர்ப்பின் போது, நீதிபதி ஐலீன் கேனன்,

“உங்களது இந்த சதித் திட்டம் மிகவும் திட்டமிடப்பட்ட மற்றும் கொடூரமானது. ஒரு மனித உயிரைப் பறிக்க முயன்ற உங்களது செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. நீங்கள் அமைதியானவரோ அல்லது நல்லவரோ அல்ல.” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ரியான் ரூத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காகக் கூடுதலாக 07 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை என்பதால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ரியான் ரூத்தின் புதிய வழக்கறிஞர் மார்ட்டின் ரோத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.