புதியதாக உருவாக்கப்பட்ட ஒரு கனேடிய மருந்து நிறுவனம், உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட மருந்துகளில் ஒன்றான ஓசெம்பிக்(Ozempic)இற்கு ஜெனெரிக் (generic) தயாரிப்பைக் கொண்டு வந்து சந்தையில் இடம்பிடிக்க முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
“இந்த ஒரே மருந்தில் நாங்கள் எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம் என்று சொல்லலாம்” என்று டொரோண்டோவைத் தலைமையிடமாகக் கொண்ட Vimy Pharma நிறுவனத்தின் இணை நிறுவனர் David Suchon கூறியுள்ளார்.
உடல் எடை குறைக்கும் மருந்துகளான Ozempic மற்றும் Wegovy ஆகியவற்றின் செயலில் உள்ள மூலப்பொருளான semaglutide-க்கு இருந்த தரவு பாதுகாப்பு (data protection) ஜனவரி மாதத்தில் காலாவதியானது என்று கனேடிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதனால் toikahd மருந்துகளைவிட மலிவான ஜெனெரிக் மருந்துகள் சந்தையில் வருவதற்கான வாய்ப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் ஏற்பட்டுவரும் வரி மாற்றங்களால் கனடாவில் தேசப்பற்று அதிகரித்துள்ள சூழலில், 2024-ல் நிறுவப்பட்ட Vimy Pharma, கனடாவில் கனடியர்களுக்காக மலிவான விலையில் மருந்தை தயாரிப்பதன் மூலம் அந்த தேசப்பற்று உணர்வை பயன்படுத்த விரும்புகிறது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
“உள்ளூர் பிராண்டுகள் மற்றும் நிறுவனங்களை ஆதரிக்க நாடு முழுவதும் மக்கள் ஆர்வமும் ஆதரவும் அதிகரித்து வருகிறது,” என்று Farris Smith, Vimy Pharma நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் கூறினார். அவர் மற்றும் Suchon இருவரும் முன்பு Novo Nordisk நிறுவனத்தில் நிர்வாகிகளாக பணியாற்றியவர்கள். அந்த டேனிஷ் நிறுவனம் தான் Ozempic மருந்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Ozempic கனடாவில் நீரிழிவு நோய்க்கு (diabetes) சிகிச்சையாகவும், சிறுநீரக செயலிழப்பு வேகத்தை குறைக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடல் எடை குறைக்கவும் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கனடியர்கள் Ozempic-ன் மலிவான தயாரிப்பைப் பெறக்கூடும் எனவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.