எடோபிகோக் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் டொரோண்டோவின் சர்வதேச முஸ்லிம் அமைப்புடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமையாக இருந்தது என ரொரன்டோ முதல்வர் டக் பேர் தனது லிங்டின் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
ரமலான் என்பது நம்பிக்கைஇ தாராள மனப்பான்மை மற்றும் சமூக ஒற்றுமையைப் பற்றிச் சிந்திக்கும் காலமாக மட்டுமல்லாதுஇ ஒன்டாரியோவை தினமும் வலுப்படுத்திக் கொண்டிருக்கும் முஸ்லிம் குடும்பங்களின் பல்வேறு பங்களிப்புகளை கொண்டாடும் நேரமாகவும் உள்ளது என்பதோடு இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் என அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.