டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படாத டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் இன்னும் 298 பேர் காணப்படுகின்றனர். அவர்களையும் நிரந்த சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்) இலவச சுகாதாரத் துறையில் மக்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் வேண்டுகோளின் பேரில் 640 டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் நிரந்த சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  வியாழக்கிழமை (27) மாலை கொழும்பில் சந்தித்தனர். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

8 ஆம் தரத்தை பூர்த்தி செய்து, என்.வி.கியூ மட்டம் 3 சித்தியடைந்த 840 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும் தற்சமயம் மேலும் 298 பேர் நிரந்தர நியமனம் இல்லாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

27,000 கொடுப்பனவுடன் களத்தில் இறங்கி வேலை செய்வது கடினமாகும், ஆகையினால் இவர்களையும் சேவையில் நிரந்தரமாக்குமாறு நான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை

an

அமைதியான உலகிற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் – ஜனாதிபதி

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும்

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த