இன்று வியாழக்கிழமை (23) வாழைச்சேனை வாகனேரி சந்தியில் இடம்பெற்ற விபத்தில், டிப்பர் லொறி ஒன்று வேன் மீது மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து நிகழ்ந்த வேனில் இருந்து ஒரு சாரதி அனுமதிப்பத்திரம் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தின் விபரம் தெரிந்தவர்கள் அல்லது உரிய நபரின் உறவினர்கள் இருப்பின், வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது அருகில் உள்ள அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.