பொதுபலசேனாவின் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்கள் குறித்து ஜனாதிபதி பொருத்தமான தருணத்தில் முடிவெடுப்பார் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்
பிரதமர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்த விடயம் நீதிமன்றம் தொடர்பானது நீதித்துறை ஏற்கனவே தனது முடிவை அறிவித்துவிட்டது.
நீதித்துறையின் ஆலோசனையை அடிப்படையாக வைத்தே எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டு;ம்.
ஜனாதிபதிக்கு பொருத்தமான தீர்மானங்களை எடுப்பதற்கான திறன் உள்ளது அவர் நாட்டின் சூழ்நிலையை கருத்தில்கொண்டு சிறப்பான தீர்மானங்களை எடுப்பதற்கான தனது திறமையை கடந்தகாலத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி நீதித்துறையையும் நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கின்றார்.கடந்த காலத்தில் அவர் எடுத்த தீர்மானங்களுக்கு இந்த கொள்கைகளே வழிகாட்டின,எதிர்காலத்திலும் ஜனாதிபதி அவ்வாறே செயற்படுவார்.