சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் இருந்து விலகிவிட்டார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். 5 நாட்கள் டேட்ஸ் ஒதுக்கிய நிலையில் தன்னால் நடிக்க முடியாத நிலை என்று கூறி விலகியிருக்கிறார்.
ரஜினியுடன் ஷாருக்கான் : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. கூலி படத்தில் ஆமீர் கான் நடித்ததை அடுத்து ஷாருக்கான் நடிக்கிறார் என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
ஷாருக்கான் தொடர்பான காட்சிகளை படமாக்க 5 நாட்கள் கேட்டிருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.நான் தலைவர் ரசிகன், கண்டிப்பாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறேன். ஆனால் என்னுடைய கிங் பட ரிலீஸுக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தை வெளியிடுங்கள்ஜி என்று கோரிக்கை விடுத்தாராம் ஷாருக்கான்.
இந்த மாதம் ஷாருக்கான், ரஜினிகாந்த் வரும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டார்கள். ஆனால் தான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்து வரும் கிங் படத்திற்கு முன்பு ஜெயிலர் 2 படம் ரிலீஸாகப் போவதால் சாரி, என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் ஷாருக்கான்.
மகள் சுஹானாவை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கும் கிங் படத்திற்காக புது லுக்கில் இருக்கிறார். இந்த நேரத்தில் அதே லுக்கில் வேறு ஒரு படத்தில் நடித்தால் தன் படத்தில் அது சரியாக இருக்காது என்று நினைக்கிறாராம். இதையடுத்தே என் நிலைமையை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி ஜெயிலர் 2 படத்தில் இருந்து விலகியிருக்கிறாராம்.
இது தொடர்பாக ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு பேசினார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று கூறப்படுகிறது. ஷாருக்கானின் கவனம் எல்லாம் தற்போது கிங் படம் மீது தான் உள்ளது. சினிமா தன் எதிர்காலம் என்று முடிவு செய்திருக்கும் செல்ல மகளுக்கு இந்த கிங் படம் கை கொடுக்க வேண்டும் என்று கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.