இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடிவிபத்தில் தடயவியல் குழு, பொலிஸார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் இருந்த 27 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வெடி விபத்தில் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன. தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் திகதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் பொலிஸார் நடத்திய சோதனையில் 3000 கிலோகிராம் அமொனியம் நைட்ரைட் என்ற வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முஸமில் ஷகீல் கனியா என்ற நபரை பொலிஸார் கைது செய்தனர்.