ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் வாக்குறுதிகளில் 10 ஐ நிறைவேற்றிவிட்டார்!

‘அனுர மீட்டர்’ (Anura Meter) தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் மாதத்திற்குள் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அதேவேளை, மேலும் 10 வாக்குறுதிகள் முன்னேற்றத்தில் உள்ளன, 9 வாக்குறுதிகளில் முன்னேற்றம் இல்லை, மற்றும் ஒரு வாக்குறுதி தோல்வியடைந்துள்ளது.

இந்த மதிப்பீடானது 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட 30 முக்கிய வாக்குறுதிகளைக் கண்காணித்துள்ளதுடன், 2026 வரவு-செலவுத் திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது; எனினும், இது ‘டிட்வா’ (Ditwah) சூறாவளிக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டது.

அனுர மீட்டரினால் கண்காணிக்கப்படும் வாக்குறுதிகள் பொதுமக்களின் அதிக ஆர்வம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை பொருளாதார சீர்திருத்தம், ஆளுமை, ஊழல் எதிர்ப்பு, சட்டமும் ஒழுங்கும் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய கொள்கைப்பரப்புகளை உள்ளடக்கியுள்ளன.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக Manthri.lk முன்னெடுக்கும் ஒரு சிறந்த முயற்சியே இந்த ‘அனுர மீட்டர்’ ஆகும். இதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை முறையே ‘மைத்திரி மீட்டர்’ (Maithri Meter) மற்றும் ‘கோட்டா மீட்டர்’ (Gota Meter) ஊடாக Manthri.lk கண்காணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனுர மீட்டரில் கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில் ஏழு வாக்குறுதிகள் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என விரும்பும் மேலதிக வாக்குறுதிகளை முன்மொழியுமாறு Manthri.lk பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

Manthri.lk என்பது இலங்கையின் ஒரே பாராளுமன்ற கண்காணிப்பு தளமாகும். இது இலங்கையின் மிகப்பெரிய சுயாதீன சிந்தனைக் குழாமான (Think tank) வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. கண்காணிப்படும் அனைத்து வாக்குறுதிகள் தொடர்பான முழுமையான விபரங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்: https://manthri.lk/ta/anura-meter.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு