‘ஜனநாயகன்’ படத்தை பொங்​கலுக்கு வெளியிட இந்திய உச்ச நீதி​மன்​றத்​தில் மேன்முறை​யீடு

விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை பொங்​கலுக்கு வெளியிட இநதிய உச்ச நீதி​மன்​றத்​தில் மேன்முறை​யீடு செய்யப்பட்டுள்ளது.

விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ கடந்த 9ஆம் திகதி வெளி​யாக இருந்​தது. தணிக்கை சான்​றிதழ் காரண​மாக வெளி​யா​காத​தால் ரசிகர்​கள் ஏமாற்​றமடைந்​தனர்.

இந்​நிலை​யில், இப்​படத்​தின் கேவிஎன் புரொடக்​‌ஷன்ஸ் தயாரிப்​பாளர் வெங்​கட் நாராயணா, விஜய் ரசிகர்களிடம் மன்​னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்​.

அதில் அவர், ‘வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ள​தால், என்னால் எல்​லா​வற்​றை​யும் பகிர முடிய​வில்​லை.

கடந்த டிசெம்​பர் 18ஆம் திகதி ‘ஜன​நாயகன்’ தணிக்​கைக்கு அனுப்​பப்​பட்​டது. அதைக்குழு ஆய்வு செய்​து, டிசெம்பர். 22 அன்று சில மாற்​றங்​களைப் பரிந்​துரைத்​தது. ‘யுஏ 16 பிளஸ்’ சான்​றிதழ் வழங்​கப்​படும் என மெயில் மூலம் தெரி​வித்​தனர்.

பரிந்​துரைக்​கப்​பட்ட மாற்​றங்​களைச் செய்து மீண்​டும் சமர்ப்​பித்த போதும், சான்​றிதழ் பெற முடிய​வில்​லை.

ரிலீஸு-க்கு சில நாட்களே இருந்த நிலை​யில், ஜன.5ஆம் திகதி மாலை, ஒரு புகாரின் பேரில் மறு ஆய்​வுக் குழு​வுக்​குப் பரிந்​துரைக்​கப்​பட்​ட​தாக எங்களுக்​குத் தகவல் கிடைத்​தது.

படத்தை ரிலீஸ் செய்ய மிகக் குறைந்த நாட்​களே இருக்​கும் போது, புகார் கொடுத்​தவர் குறித்த தெளி​வின்மை காரண​மாக, உயர் நீதிமன்​றத்தை அணுகினோம்.

ஜனவரி 6 மற்​றும் 7ஆம் திகதி​களில் வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், படத்​துக்கு ‘யுஏ 16 பிளஸ்’ சான்றிதழை வழங்க உத்​தர​விட்​டது.

ஆனால், தணிக்கை வாரி​யம் உடனடி​யாக உயர்நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுக்கு எதி​ராக மேல்​முறை​யீடு செய்​தது.

இதன் விளை​வாக, சான்​றிதழ் வழங்​கு​வதற்​கான நீதி​மன்ற உத்​தர​வுக்கு தற்​போது இடைக்​காலத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மன்னிப்பு கேட்கிறேன்: இந்த சூழலில் ஆதர​வளித்த ரசிகர்​கள் மற்​றும் அனை​வரிடத்​தி​லும் பகிரங்​க​மாக மன்​னிப்பு கேட்​டுக் கொள்​கிறேன். திட்​ட​மிட்​டபடி படத்தை வெளி​யிட அனைத்து முயற்​சிகளை​யும் மேற்​கொண்ட போதி​லும், கட்​டுப்​பாட்​டுக்கு அப்​பாற்​பட்ட சில காரணங்​களால் சொன்ன திகதி​யில் ரிலீஸ் செய்​ய​ முடிய​வில்​லை.

கடந்த 33 ஆண்​டுகளாக நடிகர் விஜய் தனது ரசிகர்​களிட​மிருந்து பெற்ற அன்​பு, திரைத்​துறைக்கு ஆற்றிய பங்​களிப்புக்காக அவருக்கு ஓர் அற்​புத​மான பிரி​யா​ விடை அளிக்​கப்பட வேண்​டும். அதற்கு அவர் அனைத்து வகை​யிலும் தகு​தி​யானவர். நீதித்​துறை நடை​முறை​கள் மீது நம்​பிக்கை இருக்​கிறது. விரை​வில் படம் வெளி​யாகும்” என்று வெங்கட் நாராயணா கூறியுள்​ளார்.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக் காலத் தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேன்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை நாளை திங்கட்கிழமை (12) அன்று அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை