செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்; தாளையடியில் சம்பவம்

வடமராட்சி கிழக்கு, தாளையடி பகுதியில் கரைவலைத் தொழிலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ‘நாரா’ (NARA) நிறுவனம் மேற்கொண்ட ஆய்வைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தங்கரூபன் ஆகியோருக்குக் கரைவலை சம்மாட்டி ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

நாடு முழுவதும் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலைத் தொழிலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துடன் இணைந்து நாரா நிறுவனம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டது. மனித வலுவைப் பயன்படுத்துவதற்கும், உழவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குமான வேறுபாடுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

இந்த ஆய்வினைச் செய்தி சேகரிக்கச் சென்ற வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் மற்றும் சமாசத் தலைவர் தங்கரூபன் ஆகியோரை, சுண்டிக்குளம் பகுதியில் கரைவலைத் தொழிலில் ஈடுபடும் சம்மாட்டி ஒருவர் வழிமறித்துக் கடும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

கரைவலைத் தொழில் தொடர்பான எதிர்மறையான செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாது என்றும், இத்தொழில் சார்ந்த பிரச்சினைகளில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறி அவர் மிரட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து மருதங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது குறித்து சமாசத் தலைவர் தங்கரூபன் கருத்துத் தெரிவிக்கையில், “வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால் சிறு மீனவர்கள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். எனவே, இதற்கு அனுமதி வழங்கக் கூடாது. மேலும், நாரா நிறுவனத்தின் ஆய்வுக்கு முதல் நாள், உழவு இயந்திரங்களால் ஏற்பட்டிருந்த மண்ணரிப்பை மறைப்பதற்காகக் கரைவலைத் தொழிலாளர்கள் மணல் கொண்டு குழிகளை நிரப்பியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

cacv

கனடாவில் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணை

April 17, 2026

முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரும், MMA தற்காப்புக் கலை வீரருமான ஜேசன் வாஷிங்டன் (Jason Washington) என்பவர், தனது முந்தைய

5

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவு

April 17, 2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) போது

litr

மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் – லிட்ரோ

April 17, 2026

இலங்கையில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும்

ve

தவிசாளர் வேலு யோகராஜின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின் பிணை கோரிக்கையை

Gamini

கத்தோலிக்க திருச்சபையினர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து திருப்தி!

April 17, 2026

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

iran

கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

April 17, 2026

கிளிநொச்சி – இரணைதீவு கடற்பரப்பிற்குள் கடந்த 9ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைதான

srines

இனப்பிரச்சினைக்கு பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது!

April 17, 2026

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால்

kap

ஸ்ரீலங்கன் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரின் பிணை மனு நிராகரிப்பு

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன