செயற்கை நுண்ணறிவுவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்!

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு கடந்த 16 ஆம் திகதி தொடங்கியது. 4 ஆம் நாளான நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கை அநுரகுமார திஸாநாயக்க உட்பட 20 நாடுகளின் தலைவர்கள், 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில்,

வேளாண்மை, பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள், பல்வேறு மொழிகளை அவரவர் விரும்பும் மொழியில் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பம் என பல்வேறு சவால்களுக்கு டில்லி ஏஐ உச்சி மாநாட்டில் மிகச் சிறந்த தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் மற்றும் இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன.

அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம். அழிவுக்கும் பயன்படுத்தலாம். அதுபோலத்தான் ஏ.ஐ. தொழில்நுட்பமும். இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு காண முடியும். அழிவுக்கு பயன்படுத்தினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். மனிதகுலத்துக்கு பலன் அளிக்கும் வகையில் மட்டுமே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் நன்மை, அனைவருக்கும் மகிழ்ச்சி என்ற கருத்தை முன்னிறுத்தியே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏ.ஐ. மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொலி, ஒலிகள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான காணொலி, எது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏ.ஐ. காணொலி, புகைப்படங்களை ‘வாட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும்.

சிறார் நலன், பாதுகாப்பு ஏ.ஐ. தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டில்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ. தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர்.

சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏ.ஐ. மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொலி, ஒலிகள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான காணொலி, எது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏஐ வீடியோ, புகைப்படங்களை ‘வோட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும்.

சிறார் நலன், பாதுகாப்பு ஏ.ஐ. தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டில்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ. தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர் என்றார்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது