செம்மணி; இலங்கை வரலாற்றின் பாரிய மனிதப் பேரவலம் வெளிச்சத்துக்கு வர வேண்டும்

செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டெடுக்கப்பட்டு வருவதன் மூலம் நாட்டின் வரலாற்றில் பாரிய மனிதப் பேரவலமொன்று வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருப்பதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.

மக்கள் போராட்ட இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று (19) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 572க்கும் மேற்பட்ட உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. பால்கன் மோதலின் போது போஸ்னியா ஹெர்ஸகோவினாவிலும், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நியூரம்பர்க்கிலும் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கைக்கு நிகராக இது காணப்படுகிறது.

இலங்கையின் செம்மணி அகழ்வுப் பணி செல்லும் வேகத்தைப் பார்த்தால், இது உலக சாதனையை நெருங்குமோ என்ற அச்சம் எழுகிறது.

இலங்கையில் மாத்தளை, மிருசுவில், யாழ்ப்பாணம், கொழும்பு துறைமுகப் பகுதி, சூரியகந்த, மினுவாங்கொடை, மன்னார் என இதுவரை 32 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

1999 இல் கராஜில் பணிபுரிந்த இரு இளைஞர்களின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டதில் தொடங்கி, இன்று சிறுவர்கள், கைக்குழந்தைகள், பாடசாலைப் பைகளுடன் உள்ள மாணவர்கள் மற்றும் தாய்மார்கள் தமது குழந்தைகளைக் கட்டியணைத்த நிலையில் உள்ள எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

அதேவேளை, 80களின் பிற்பகுதியில் ஜே.வி.பி. உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய மாத்தளை மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

அக்காலத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷ போன்றோர் அப்பகுதியின் இராணுவப் பொறுப்பதிகாரிகளாக இருந்த நிலையில், 2013இல் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டு மறக்கடிக்கப்பட்டன.

பந்துல இடம்போகம அளித்த சாட்சியங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதோடு, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மன்னார் மற்றும் கொழும்பு துறைமுகப் பகுதி புதைகுழிகளின் நிலைமையும் இதுவே ஆகும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத் தரவுகளின்படி 20,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பான்மையானவை வடக்கு மற்றும் கிழக்கு மக்களைச் சார்ந்தவை.

இந்நிலையிலேயே பாதிக்கப்பட்ட உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்புப் படையினரின் நிபுணத்துவமின்மை, தடயவியல் தொழில்நுட்பக் குறைபாடு, கார்பன் காலக்கணிப்பு வசதிகள் இல்லாமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அதிகாரிகளின் பற்றாக்குறை ஆகியவற்றுடன், அரசியல் விருப்பமின்மையே இந்தத் தாமதங்களுக்கு முக்கியக் காரணமாகும்.

தமது தேர்தல் அறிக்கையின் 23 ஆம் பக்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி வழங்குவதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகவுள்ள நிலையிலும் இதற்கு முன்னுரிமை அளிக்கத் தவறிவிட்டது.

எனவே, செம்மணி, மாத்தளை, மன்னார், கொழும்பு துறைமுகப் பகுதி உட்பட கண்டறியப்பட்ட 32 மனிதப் புதைகுழிகளிலும் உடனடியாக அகழ்வுப்பணிகளை முடித்து, மரபணு அறிக்கைகள், பிரேதப் பரிசோதனைகள் மற்றும் கார்பன் காலக்கணிப்பு ஆய்வுகளை விரைவுபடுத்த வேண்டும்.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் என்பவற்றை உள்ளடக்கிய சிறப்புப் பிரிவுகளை அமைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கி உடற்பாகங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவான் போபகே வலியுறுத்தியுள்ளார்.

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான