சுவிஸ் பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்

சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் பாராளுமன்றத்தின் முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் நேற்று முன்தினம் தனது கடமையைப் பொறுப்பேற்றார்.

ஜெயகுமார் துரைராஜா 38 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து சுவிற்ஸ‌ர்லாந்து வந்த அகதி. இன்று, செங் காளன் நகரின் உயர்ந்த அரசியல் பதவியான நகரமன்றத் தலைவர் (Stadtparlament-Präsident) பதவிக்கு, பசுமை கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

பாராளுமன்ற அவையில் ஏனைய கட்சி உறுப்பினர்களும், அவருடன் இணைந்து பயணிக்கும் நண்பர்களும் கலந்து சிறப்பித்தனர்கள்.பாராளுமன்ற அவையில் திருக்குறளை மூன்று தடவைகள் முன்மொழிந்து டொச் மொழியிலும் விளக்கினார்.

தமிழர் பண்பாட்டுடன் கூடிய இசையும்அவையரங்கில் வழங்கப்பட்டது.தமிழர் சிற்றுண்டி உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.

கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா ஆரம்பக் கல்வியை கோண்டாவில் இராமகிருஷ்ணமிஷனிலும், உயர் கல்வியை உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.
செங் காளன் நகர மக்களில் சுமார் 30% பேர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். அவர்களுக்காக அவர் குரல் கொடுக்கிறார்.இனவெறி, சமூக புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராடுகிறார்.அவர் இதை ஒரு சவாலாக பார்க்கிறார்.“என் முன்னோடி ஜாக்லின் காசர்-பெக், கிரீன் கட்சியிலிருந்து வந்தவர். அவரின் பாதையில் நடக்க நான் தயாராக இருக்கிறேன்” என்கிறார்.

2011-ஆம் ஆண்டு சுவிற்ஸ‌ர்லாந்து குடியுரிமை பெற்ற ஜெயகுமார் துரைராஜா, ஜேர்மன் மொழியில் முதலில் கற்ற சொற்களை நினைவுகூர்கிறார்:
ஒருகாலத்தில் ஆவணமில்லாத அகதியாக செங்காளன் சுவிஸுக்குச் சென்ற துரைராஜா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கட்சி சார்பில் நகரமன்றத்தில் அமர்ந்து வருகிறார்.
இப்போது 56 வயதாகும் இவர், தனது முழு வாழ்க்கையையும் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத அகதிகளுக்காகவே அர்ப்பணித்துள்ளார்.

ஆவணங்களும் இல்லை, கல்வியும் இல்லை, கைப்பையும் இல்லை. இப்படித்தான் ஜெயகுமார் துரைராஜா 1988-ஆம் ஆண்டு, 18 வயதில், சுவிற்சர்லாந்தில் காலடி வைத்தார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த