சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு – மூத்த சட்டத்தரணி இரத்தினவேல்

இலங்கையில் பொறுப்பு கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம் என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசியல் தீர்வும் பொறப்புக் கூறலும் ஒரு எண்ணிம ஆவண காப்பக அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் என்னைப் பொறுத்தவரையில் ஒரு கண் துடைப்பு அலுவலகம் சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.

உலகில் பல்வேறு நாடுகளில் காணப்படும் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்கும் அலுவலகங்களாக செயல்படுகின்றன.

ஆஜென்டினா, குவாட்டலாமா கொசுவா ,இங்கிலாந்து ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த அலுவலகங்கள் செயப்படுகின்றன.

மேலும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்புகள் எதிர்பார்க்கின்ற பொறுப்பு கூறல் விவகாரம் பின்னோக்கி பகிர்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் , பொலிஸ் திணைக்களம் மற்றும் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு இன்மையே காரணம்.

சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை உரிய காலப் பகுதியில் முடிவுறுத் தவறுமானால் அதே சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருக்கும் சட்டத்தரணிகள் இரண்டு மூன்று வருடங்களில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்று விடுவார்கள் வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்தடிப்புச் செய்யப்படும்.

ஆகவே இலங்கையில் பொறுப்பு கூறல் மற்றும் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண் துடைப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

arr

போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

March 13, 2026

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹேஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று

Harini-amarasooriya

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே!

March 13, 2026

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப்

44

கனடா பீல் பிராந்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு

March 13, 2026

பீல் பிராந்திய காவல்துறை ( Peel Regional Police) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தி,

sas

ஊழல் குற்றச்சாட்டு; சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணை நிறைவு

March 13, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க

savithri pol

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ‘அவள் வாழ்வின் உயிர்நாடி’

March 13, 2026

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா

nil

மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டறியப்பட்டது

March 13, 2026

இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில்

s

ஆழ்கடலில் பாரிய சுற்றிவளைப்பு: போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 10 பேர் கைது!

March 13, 2026

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பலநாள்

it

இலங்கையின் சுகாதார சேவைக்கு உலகளாவிய பாராட்டு

March 13, 2026

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள வெப்பமண்டல நாடுகளின் சரும நோய்கள் குறித்த 2ஆவது சர்வதேச விசேட நிபுணர்கள் மாநாடு புதன்கிழமை

un_1

ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை

March 13, 2026

வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை

5

ஹோர்மூஸ் நீரிணை அருகே 6 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

March 13, 2026

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல்

ir

உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை இன்று ஈரானுக்கு அனுப்ப நடவடிக்கை

March 13, 2026

இலங்கைக்குத் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கடிக்கப்பட்ட’IRIS DENA’ கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள்

Poli

பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

March 13, 2026

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில், வீட்டு