சுந்தர் பிச்சை வெளியிட்ட முக்கிய தகவல்கள்

டெல்லியில் இடம்பெறும் ஏஐ (Artificial Intelligence) மாநாட்டின் 4 ஆவது நாளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுந்தர் பிச்சை முக்கியப் பேச்சாளராக கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சுந்தர் பிச்சை பேசும் போது தெரிவித்ததாவது, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் கூகுள் சார்பில் 15 பில்லியன் டொலர் முதலீட்டில் ஏஐ மையம் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஏராளமானோர் தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய ஏஐ தொழில் நுட்பங்கள் உருவாகி, நாட்டின் தொழில் வளங்கள் மேலும் விரிவடையும் .

இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்‌டிக் கேபிள் பதிக்கப்படவுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற பலருக்கும் வானிலை முன்னறிவிப்பு சேவைகள் வழங்கப்பட முடியும்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் பணம் சம்பாதிக்க முடியுமென யாரும் நினைத்திருக்கவில்லை. இப்போது இலட்சக்கணக்கானோர் யூடியூப்பில் இலாபம் பெறுகிறார்கள்.

அதே நேரத்தில், ஏஐ தொழில் நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது தொழில் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டார்.

கூகுளின் டீப் மைண்ட் நிறுவனம், ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஆல் பாபோல்ட் (AlphaFold) என்ற மொடலை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் புரொடீனின் 3டி வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மருத்துவத் துறையில் பெரிய புரட்சி ஏற்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பயன்படும். ஏஐ தொழில்நுட்பங்கள் அறிவியல் துறையில் மிகவும் கடினமான பிரச்சினைகளுக்கு கூட தீர்வை வழங்கும் சக்தி கொண்டவை என மேலும் குறிப்பிட்டார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.