சீதையம்மன் ஆலயத்தில் இந்திய அமைச்சர் வழிபாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் இந்தியாவின் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண பிரசாத் உள்ளிட்ட குழுவினர் நேற்று (31) சனிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த ஆலயத்திற்கு வருகை தந்த குழுவினரை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசிலையும் வழங்கிக் கௌரவித்தார்.

இந்த விஜயம் தொடர்பாகப் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண பிரசாத் கருத்துத் தெரிவிக்கையில்:

“இராமாயண யாத்திரை என்பது இராமபிரான் அவதரித்த அயோத்தியையும், சீதையன்னை பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சீதாமர்ஹியையும் இணைப்பதாகும். அன்னை ஜானகி பிறந்த இடத்தில் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தியில் தசரத சக்கரவர்த்தியின் புதல்வர்களான இராமனும் லட்சுமணனும் வனவாசம் சென்ற போது, இராவணனால் அன்னை சீதை கடத்திச் செல்லப்பட்டு இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டார்.”

இது தொடர்பாகச் சனாதன கங்கா மன்றத்தின் தலைவர் பிரவீன் குமார் கருத்துத் தெரிவிக்கையில்:

“இந்த வரலாற்றுப் பாதையைச் சுற்றுலாத் தலமாக விஸ்தரிக்க வேண்டும். இந்த வரலாற்றுப் பாதையின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கைக்கான உறவை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் என்பதே எனது நோக்கமாகும்.

அன்னை சீதை மற்றும் இராமபிரானின் பாதச்சுவடுகளைத் தேடி நாம் இங்கு வந்தோம். நாம் கங்கைக்குப் பணியாற்றி வருகிறோம். கங்கை எமக்குப் புனிதமான நீர் மற்றும் புனிதமான நதி. அனைத்துத் தெய்வங்களும் கங்கையுடன் தொடர்புடையவர்கள். எங்கெல்லாம் கங்கை இருக்கிறதோ அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார்.

திரேதா யுகத்திற்குப் பின்னர் முதன்முறையாக இந்த வருடம் புனித பாதுகைகளை கொண்டுவர இருக்கின்றோம். அது இரண்டு மாதங்களுக்கு இங்கு வைக்கப்படும். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவித்திருக்கின்றோம். இலங்கையில் இராமாயண சுற்றுலாவை மேம்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

photo-collage.png

யாழ். மாவட்ட செயலகத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு

August 26, 2026

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு

acid

கணவனை பழி வாங்க மனைவி மீது அசிட் தாக்குதல்

August 26, 2026

ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில்

paw

திருடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு!

August 26, 2026

யாழில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு

hi

அதிவேக நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

August 26, 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களில் தற்போது

Nirmala-Sitharaman-Ali-Sabry

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) உதவி கிடைக்க இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய முக்கிய பங்கு: அலி சப்ரி வெளிப்படுத்திய தகவல்

August 26, 2026

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இந்திய நிதியமைச்சர்

nanda

இலங்கைப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை நெருங்குகிறது: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

August 26, 2026

2022-ஆம் ஆண்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம் வேகமான மீட்சியடைந்து மீண்டும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை

Namal-750x422

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

August 26, 2026

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல் வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook) மற்றும்

sajith 5

எல் நினோ – லான் நினா காலநிலை மாற்றத்திற்கு எதிராக தேசிய தயார்நிலை தேவை: சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

August 26, 2026

மாறிவரும் எல் நினோ – லான் நினா (El Niño–La Niña) காலநிலை சுழற்சியால் ஏற்படக்கூடிய தீவிர பாதிப்புகளை எதிர்கொள்ள

Suresh Salley Arrested-828580

முன்னாள் புலனாய்வுத் தலைவர் சாலே விசாரணைக்கு இடையூறு விளைவித்து தகவல்களை மறைத்துள்ளார்: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தகவல்

August 26, 2026

சாலே (Suresh Salley) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத்

canada export

டிரம்ப் – கனடா வர்த்தக மோதல் தீவிரமடைதல்: உலகளாவிய தாக்கம்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் கனடியப் பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள வர்த்தக மோதல், வட அமெரிக்க

P_4790484658

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகம் முழுவதும் 29-ஆம் தேதி சிறப்பு முகாம்!

August 26, 2026

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரேஷன் அட்டைதாரர்களுக்கான கைவிரல் ரேகைப் பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்

maalai-malar_2026-08-26_djl2qd6s_vijay

“அன்பும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகட்டும்!” – உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் விஜய் ஓணம் வாழ்த்து!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் ஓணம் நல்வாழ்த்து கேரள மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் திருநாளை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் கட்சித்