நாட்டின் சில பகுதிகளில் கடும் மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று(12) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் உள்ள இந்த எச்சரிக்கையின்படி, 08 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மாவட்டங்களில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.