சிரிலிய சவிய வங்கி கணக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலிப பீரிஸ் மற்றும் சிராந்தி ராஜபக்சவின் சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதேவேளை முன்னாள் முதல்பெண்மணி சிராந்திக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை தேவைப்படுவதாக கொழும்பு தேசிய மருத்துதுவமனை தெரிவித்துள்ளதுகொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் பொடராகமஇதனை தெரிவித்துள்ளார்