அவுஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர், வீதியில் செல்லும் வாகனங்கள், பொலிஸ் வாகனங்கள் மீது சுமார் 100 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.