‘எங்கேயும் எப்போதும்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் அறிமுகமாகி, ‘ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை’ மூலம் பிரபலமான நடிகர் சர்வானந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ பைக்கர் ‘ எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
தெலுங்கு இயக்குநர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ பைக்கர்’ எனும் திரைப்படத்தில் சர்வானந்த் , டொக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜே. யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். துவி சக்கர வாகனத்தில் சாகச பந்தயங்களில் ஈடுபடும் வீரரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை யு வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வம்சி & பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை விக்ரம் ரெட்டி வழங்குகிறார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் துவி சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடும் வீரர்களின் உளவியல் குறித்தும் , சாகசங்கள் குறித்தும், கரடு முரடான மலைப் பாதையில் நடைபெறும் போட்டிகள் குறித்தும் காட்சிகள் இடம் பிடித்திருப்பதால்.. ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.