சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் போபண்ணா அறிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீரர்களில் மிகவும் அனுபவம் மிக்கவர் ரோகன் போபண்ணா. இவர் கலப்பு இரட்டையர் பிரிவில் தலைசிறந்து விளங்கினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர், தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; குட் பை, ஆனால், இது முடிவல்ல. கனத்த இதயத்துடனும், நன்றியுடனும் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். உங்களின் வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ளதாக மாற்றிய ஒன்றிற்கு எப்படி விடை கொடுக்க முடியும்? 20 ஆண்டுகள் டென்னிஸ் வாழ்க்கைக்கு தற்போது விடை கொடுக்கிறேன்.