முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (18) பிணை வழங்கியுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, சமன் ஏக்கநாயக்கவை தலா 02 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம் ஒன்றிற்காக நிதி அனுமதி வழங்கியதன் மூலம், அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.