சந்தேகத்தின் பேரில் கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் விடுவிப்பு!

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார், நோர்போக்கில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், பெர்க்சையர் மற்றும் நோர்போக்கில் உள்ள சில முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது.

அண்ட்ரூவின் கைது குறித்துப் பதிலளித்த மூன்றாம் சார்ள்ஸ் மன்னர், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும், பொலிஸாருக்கு தனது முழுமையான மற்றும் இதயப்பூர்வமான ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு என்றும் தெரிவித்தார்.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான தொடர்பு மற்றும் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அண்ட்ரூவிடம் விசாரணை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பொலிஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் தொகுப்பில் இவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

எவ்வாறாயினும், அந்த நபர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை தேம்ஸ் வேலி பொலிஸார் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய முன்னாள் இளவரசர், வாகனத்தின் பின் இருக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

அண்ட்ரூ கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அவர் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்பதைத் தொடர்ந்து உறுதியாகவும் கடுமையாகவும் மறுத்து வருகிறார்.

ஒரு முழுமையான மதிப்பீட்டைத் தொடர்ந்து, தற்போது முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தேம்ஸ் வேலி பொலிஸார் தெரிவித்தது.

மேலும், 2010 ஆம் ஆண்டில் அண்ட்ரூவுடன் பாலியல் ரீதியான சந்திப்பிற்காக எப்ஸ்டினால் இரண்டாவது பெண் ஒருவர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார் என்ற தனிப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் தாம் ஆராய்ந்து வருவதாக பெப்ரவரி தொடக்கத்தில் பொலிஸ் தெரிவித்திருந்தது.

பிரித்தானியர் அல்லாத அந்தப் பெண், அந்தச் சமயத்தில் 20 வயதுகளில் இருந்துள்ளார்.

அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், உள்துறை அமைச்சுக்கு தேம்ஸ் வேலி பொலிஸ் முன்கூட்டியே தகவல் வழங்கியிருந்ததாக பிபிசி செய்தி சேவை தகவல் வௌியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இடம்பெற்ற இந்தக் கைது நடவடிக்கை, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான