சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலையுடன் நிறைவடைந்த நிலையில், பேரவைக்கான 11 முக்கியக் குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைக் குழுத் தலைவர்களின் விவரம்:
-
அவை உரிமைக் குழு: சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் (தவெக)
-
பேரவை விதிகள் குழு: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் (இக்குழுவின் உறுப்பினர்களாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்).
-
பொதுக் கணக்குக் குழு: சையது பாரூக் பாஷா (ஐயூஎம்எல்)
-
மதிப்பீட்டுக் குழு: அருள்பிரகாசம் (தவெக)
-
பொது நிறுவனங்கள் குழு: அ. கல்லாணை (தவெக)
-
சட்ட விதிகள் ஆய்வுக் குழு: டி. ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
-
அரசு உறுதிமொழிக் குழு: ரா. விஜயராஜன் (தவெக)
-
அவைக் குழு: ரா. செல்லசுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
-
மனுக்கள் குழு: அரசு கொறடா ரா. சபரிநாதன்
-
நூலகக் குழு: ஜோதிமணி (விசிக)
-
பேரவை ஏடுகள் குழு: விஜய்தாமு (தவெக)
இந்த 11 குழுக்களிலும் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள் எனவும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
Hashtags:
#TNAssembly #SpeakerJCDPrabhakar #AssemblyCommittees #ChiefMinisterVijay #RaviShankar #TVKGovt #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #TamilNews #BreakingNewsTamil #TrendingNewsTamil