சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் – பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி!

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் (14) பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையிலும், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் பங்கேற்புடனும் ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் ஜனாதிபதி செயலகமும் இணைந்து செயற்படுத்தும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத் தொடருக்கு இணையாக கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள மாணவர்கள் ஒரு அரசியல்வாதியாக அல்லாமல் ஒரு இராஜதந்திரியாக இருக்க உறுதிபூண வேண்டும் என்று தெரிவித்தார். ஏனெனில், அரசியல்வாதி அடுத்த தேர்தலில் வெற்றிபெற வாக்குகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டாலும், ஒரு இராஜதந்திரி எதிர்கால சந்ததியினரின் நலனை நோக்கமாகக் கொள்கிறார் என்று அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, நாட்டின் நலனுக்காக ஒரு இராஜதந்திரியாக இருப்பது முக்கியமானது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன், சட்டத்தை மதிக்கும், சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களான நீங்கள் சட்டத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இந்நிகழ்வில் கலந்துகொண்ட பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன அவர்கள், பாராளுமன்றத்தின் வகிபங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் ஓர் உரையை நிகழ்த்தினார்.

மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே அவர்கள், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். அதேபோல், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான சந்திமா விக்ரமசிங்க மற்றும் ஜி.ஜி.எஸ்.சி. ரொஹான் ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தின் சார்பில் கருத்துக்களைத் முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பமானதுடன், சபாநாயகரை நியமித்தல் மற்றும் உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தல் என்பன இடம்பெற்றன. அதன்பின்னர், மாணவர் பாராளுமன்றப் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்கள் கருத்துக்களைத் தெரிவித்த பின்னர், மாணவர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் பங்கேற்புக்காக சான்றிதழ்கள் வழங்குவதும் இதனுடன் இணைந்ததாக இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சித்திட்டம் மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை வளர்ப்பதில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது என்றும், மாணவர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்புக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் அதிபர் சம்பத் வேரகொட அவர்கள் தனது நன்றி உரையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

kanda

கண்டாவளையில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

November 18, 2025

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா

Dead_

சிலாபம் பாடசாலைக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு

November 18, 2025

சிலாபத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என

pla

மீண்டும் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள்

November 18, 2025

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தற்போது மன்னார் கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் துகள்கள் கரையொதுங்கி வருகிறது. வடக்கு கரையோரம் சார்ந்த

1000925019

தமிழ்நாடு எஸ்பி பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்!

November 18, 2025

இந்தியா தமிழ்நாடு எஸ்பி பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தனியார் பேருந்தில் கொண்டுசெல்லப்பட்ட இலங்கை ரூபாவில் சுமார் இருபதி கோடி

karaichchi

புத்தர் சிலை விவகாரம்; கரைச்சி பிரதேச சபையில் கண்டனம்

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையில் ஏக மனதாக கண்டனம் நிறைவேற்றம். குறித்த சம்பவம் தொடர்பான

dd

வடமராட்சியின் இரண்டாவது கந்தபுராண விழா!

November 18, 2025

வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய இரண்டாவது கந்தபுராண விழா வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர்

1000922193

வல்வெட்டித்துறையில் 90 பேர் இரத்ததானம்!

November 18, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை இரத்ததான சங்கம்நடாத்திய இரத்ததான முகாமில் 90 பேர் இன்று இரத்ததானம் செய்துள்ளனர். வல்வெட்டித்துறை நெடியாகாடு கணபதி

dan

தனுஷ் இயக்கத்தில்; ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம்

November 18, 2025

உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார்.

kan

3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்த “காந்தா”

November 18, 2025

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

sim

சிம்பு -ராம்குமார் பாலகிருஷ்ணன் படம் எப்போது?

November 18, 2025

சிம்பு நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 திரைப்படம் தயாராக இருந்தது.ஆனால் அப்படம் திடீரென தள்ளி வைக்கப்பட்ட நிலையில்

tea

2030 இல் 2.5 பில்லியன் டொலர் வரை தேயிலை ஏற்றுமதி வருமானம்?

November 18, 2025

அரசாங்கத்தால் 2030ஆம் ஆண்டு தேயிலை உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் கிலோ கிராம் இலக்கில் 75 சதவீத பங்களிப்பு

raugh4

இஸ்ரேல் கருவியாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மாற்றப்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம்

November 18, 2025

பயங்கரவாத விசாரணைப்பிரிவு இஸ்ரேலுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டிக்க முடியாத அளவுக்கு வெளிவிவகார அமைச்சு கோழைத்தனமாக