கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்காவை திறக்க நெருக்கடி?

கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்கா வேலைகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. இருப்பினும், இம்மாத இறுதியில் திறக்க அரசு தரப்பில் நிர்ப்பந்திப்பதால், நெருக்கடிக்கு இடையே அதிகாரிகள் வேலை பார்க்கின்றனர்.

கோவை காந்திபுரத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. 2024 அக். 6ல் முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்தபோது, 2025 ஜூனில் செம்மொழி பூங்கா பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்தார்.போதுமான நிதி ஒதுக்காததால், தாமதமாகி வந்தது. கூடுதல் நிதி கேட்டும் கிடைக்கவில்லை. இச்சூழலில், உலக புத்தொழில் மாநாட்டை துவக்கி வைக்க, அக். 9ல் வந்திருந்த முதல்வர், ‘செம்மொழி பூங்காவை அடுத்த மாதம் (நவ.) திறந்து வைப்பேன்’ என அறிவித்து விட்டார். ஆனால், பூங்கா பணிகள் இன்னும் முடியவில்லை.

முதல்வர் அறிவித்து விட்டார் என்பதற்காக, வரும் 26ல் வேறொரு நிகழ்ச்சிக்கு கோவை வரும் சமயத்தில், செம்மொழி பூங்காவை திறந்து வைக்கலாம் என திட்டமிட்டு, இதுதொடர்பான அறிவிப்பை, நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டார்.

இன்னும் பணிகள் பாக்கியுள்ளதால், மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.10 நாட்களில் முடிக்க வேண்டும் என்பதால், நெருக்கடிக்கு மத்தியில் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கிடையே பூங்கா பணிகளை பார்வையிட அமைச்சர் நேரு நேற்று வந்தார். அவரும், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோரும், சுற்றிப்பார்த்தனர். நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மதுசூதனன், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர், பூங்கா சிறப்புகளை விளக்கினர்.

நிருபர்களிடம் அமைச்சர் நேரு கூறுகையில், ”செம்மொழி பூங்காவை, இம்மாத இறுதியில் முதல்வர் திறந்து வைப்பார்; தேதியை முதல்வர் முடிவு செய்வார். இன்னும் சில வேலைகள் பாக்கி உள்ளன. இதற்காக ரூ.167.25 கோடி ஒதுக்கப்பட்டது. கூடுதலாக ரூ.47 கோடி கோரப்பட்டது. மொத்தம், ரூ.214.25 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் பங்களிப்பு தொகை வழங்கப்படும். 1,000 வகையான ரோஜாக்கள் உள்ளன. வேறென்ன செம்மொழி பூங்காவில் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்,” என்றார்.

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்